Azhage Azhagu
My post content
அழகே அழகு
தேடித் தேடிப் பார்த்தாலும்
திக்கெட்டும் அலைந்தாலும்
கைக்கெட்டாத கடவுள்
கண்ணெட்டும் தூரத்தில் நமக்குள்ளே ஒளிந்திருந்து
காலம் காலமாய் கருணையுடன்
நம் வரவை எதிர்பார்த்து
அமைதியாக அமர்ந்திருக்கும்
அழகே அழகு!
தீய வழக்கங்களின் பிடியில் சிக்கி
திண்டாடி அலைந்து திரியும் பொழுது
மெல்லக் காதில் கிசுகிசுத்து மனதை
மாற்றி மேல் நோக்கி செல்லும் ஆசையை
மிருதுவாக உட்செலுத்தி அது வேலை
செய்யும் நேரம்வரை காத்திருந்து
கை கொடுத்து அழைத்துச் செல்லும்
அழகே அழகு.
தினம் ஒரு சாவு கண் முன்னே கண்டாலும்
தன் மரணம் நினைக்க நேரமில்லா
அவசர வேகப் பிடியில் அகப்பட்ட
மனித குலத்தை ஒரு நொடி நிற்க வைத்து
உலகிற்கு அப்பால் உள்ள உண்மையை பற்றி
யோசிக்கத் தூண்டும்
கண்ணிற் படாத சக்தியின் மகிமை
அழகே அழகு.