Changae Muzhangu

சங்கே முழங்கு

தமிழருமை தானறிந்து சங்கே முழங்கு!

தமிழனென்று பெருமையுடன் சங்கே முழங்கு!

ஞாலம் போற்றும் ஞானம் பெற்று

மேலும் உயர்ந்து மேன்மை பெற

உலகம் போற்ற உன்னத வாழ்வு

என்றும் வாழ சங்கே முழங்கு!

மிருகம் உயர்ந்து மனிதன் ஆகி

மனிதன் உயர்ந்து மகான் ஆகி

மகான் உயர்ந்து மரணம் மாய்த்து

மனம் கடந்து பிறவி கடந்து

மகத்தாய் வாழ சங்கே முழங்கு!

தமிழ் தாயின் தவக் குழந்தை

தரணி மட்டும் தான் ஆளாமல்

நான்கு நிலை மேல் சென்று

நல்ல சுக வாசம் பெற

சங்கத் தமிழ் சங்கே முழங்கு!

தமிழா தமிழா வா வாவென்று

மொழியால் சேர்ந்து ஒன்று கூடி

குலம் வளர குணம் வளர

குண்டு சட்டி குதிரை இல்லாமல்

உன்னத நிலை உயர்ந்த பதவி

உள்ளே பெற சங்கே முழங்கு!