Deepam Aerri Araththi Eduppom



தீபமேற்றி ஆரத்தி எடுப்போம்
ஆசை மனசை தூசு தட்டி
கசக்கி பிழிந்து அடித்து துவைத்து
மாசை அறவே முற்றும் அகற்றி
இசைக்கும் நாதம் எட்டிப் பிடித்து
கனிந்த இதயம் குவிந்து ஒன்றி
விளிம்பு தட்டில் கொட்டாமல் ஏந்தி
முனைந்து ஏறி முக்கண் முனை
குனிந்து கோலமிட்டு குன்றி அமர
பக்தி தீபம் பதமாய் ஏற்றி
ஆற்றல் கதிர்கள் சற்றே இணைய
சக்தி சித்தி சகலமும் ஒதுக்கி
மாற்றம் இல்லா நிலை அடைந்து
ஆரத்தி எடு உண்மை உணர்ந்து
நேரத்தில் நல்ல செயல் நோக்கி
பாரத்தை இறக்கி பழகு தினம்
வீரத்தை காட்டி மனம் வென்று
உள்ளத்தில் ஒரு கோவில் கட்டு