Magizhchi

My post content

மகிழ்ச்சியின் மர்மம்

குழந்தையின் குபுக்கென்ற குதூகலக் குளிர்சிரிப்பு

பன்னீராய் பரவசப் படுத்தியது பார்த்தவரை

உதிரிப்பூவான உல்லாசம் ஊதல்காற்றின் உட்புகுந்து

மழைக்கால மண்ணாய் மனதுள்ளே மணம்பரப்ப

அலையின்மீது அழகாய் அசைந்தாடும் ஆனந்தமாய்

எங்கும் எவரும் எப்போதும் எடுத்தணைக்க

தானாகவே தயாராகி தவிப்புடன் தவமிருக்க

வற்றாத வானவில்லின் வர்ணங்கள் வழித்தெடுத்து

கள்ளமில்லா கணீர்சிரிப்புடன் கலந்து குழைத்து

சட்டென்று சாய்த்துக்கொட்டும் சரம்சரமான சிரிப்பு

அழிவில்லா ஆனந்தம் அளவுகடந்த அன்பு

உண்மையான உவகை உயிர்பெற்றது உள்ளே

மங்காத மகிழ்ச்சியின் மகத்தான மர்மம்

வசதியிலில்லை

வனத்திலில்லை

வீட்டிலில்லை வெளியிலில்லை

நமக்குள் நெடுந்தூரத்தில் நீண்ட நெடுங்காலமாய்

பேரின்பப் பேராற்றலின்

பெருங்கடலாய் பெருகியுள்ளது