Ninaivugal Aayiram


My post content
நினைவுகள் ஆயிரம்
எண்ணங்கள் பல கோடி மலர்ந்து
உதிரிப் பூவாய் பல்லாயிரம் உலர
மறக்க முடியாத மண் வாசனையாய்
மனதில் வாழும் நினைவுகள் ஆயிரம்
அதில் தாயின் மடியின் சுகம்
தந்தையின் விரல் பிடித்த நடை
கூடப் பிறந்த கொஞ்சல் கோவம்
அத்தையின் மெத்தையில் உதித்த கதை
பள்ளித் தோழியின் துள்ளலும் துடுக்கும்
வெள்ளை மனதின் வாய்திறந்த சிரிப்பும்
வாலிபத்தின் வசந்தம் வீசிய தென்றலும்
மழையில் சிலிர்த்த மோகன மயக்கமும்
குடும்ப வாழ்வின் இன்ப துன்பங்களும்
குழந்தையின் குளிர்ந்த மழலைச் சொற்களும்
மனமுடைந்த நிலையில் திரும்பிய முனைகளும்
அன்பாய் அரவணைத்த ஆறுதல் சொற்களும்
வயதின் முதிர்ச்சியால் வளர்ந்த அறிவும்
வாழ்க்கையின் முடிவை மகிழவைக்கும் தியானமும்
பேரின்ப நிலைக்கு பரிவோடு பதமாய்
அழைத்துச் செல்லும்
குருவின் அருளும் என்றும்
நிலைநிற்கும்