Tholaindha kaadholai

My post content

தொலைந்த காதோலை

காதோலையை மூடிய கதவிற்கு பின் துலைத்தேன்

யாத்திரை செய்து, யக்யம் செய்து தேடித் திரிந்தேன்

கண்ணில் பட்டவரிடமெல்லம் கேட்டேன்

கண்டவர் யாராவது தெரியுமா என்றேன்

காணாதவர் கண்டது போல் பேச மயங்கினேன்

உடனடியாக அவர் பின் சென்று ஏமாந்து திரிந்தேன்

அது வெறும் அலங்கார காதோலை மட்டும் அன்று

அதிலிருந்து வரும் மயக்க வைக்கும் பாட்டு ஒன்று

உலகை மறக்க வைக்கும், உள்ளம் பூரிக்க வைக்கும்

உண்மையான முன்னேற்றம் உடனே உணர வைக்கும்

யாரிடம் கேட்பது, எங்கு கிடைக்கும் இந்த காதோலை

தேடாத இடமில்லை செய்யாத முயற்சி இல்லை

இனி நம்மால் முடியாது என்று

சோர்ந்து கைவிட்டு

தேடல் தொடர வேண்டாம் என்று போகவிட்டு

கண நேரம் அமர்ந்து ஆலோசித்து பூத்தொடுக்க

அமைதியான மனம் ஆழ்ந்து சென்றது முத்தெடுக்க

உடனே ஒரு இசை வெகு தூரத்திலிருந்து கேட்க

அதைப் பின் பற்றி சென்றேன் கானத்தை மீட்க

மூடிய ஒரு கதவின் பின்னிருந்து இசை வருவது தெரிந்தது

என் உயிர், கதவை மெல்லத் தட்ட ஆரம்பித்தது

கொஞ்சம் கொஞ்சமாய் வேகம் பிடிக்க

உள்ளம் உருகி கண்களில் அருவியாய் கொட்ட

தன்னை மறந்து தன் நிலை மறந்து

கதவு திறப்பது ஒன்றே நோக்கமாக

தவிப்பின் உச்சிக்கு சென்ற பொழுது

கண்ணின் நரம்புகள் ஒன்று கூடி

கதவை உடைத்து வழி செய்து முன்னேறியது

காலம் காலமாய் செய்த தேடலுக்கு ஒரு முடிவு கண்டது

தொலைத்தவரும் தேடியவரும்

மட்டுமே புரிந்து கொள்வர்

கண்டவரும் கேட்டவரும் மட்டுமே தெரிந்து கொள்வர்

ஆஹா ஆனந்தம் என்னவென்று சொல்வேன்

ஓஹோ அற்புத சுகம் நான் கொள்வேன்

எல்லையில்லா இன்பம் கடலானது

இனிய இசை கற்பனையின் மடலானது